Hero Vs Thambi 5th day Report
5-வது நாளான நேற்று ஹீரோ, தம்பி படங்கள் நல்ல வசூலை பெற்றுள்ளன.

தமிழ் சினிமாவில் கடந்த வார வெள்ளிக்கிழமை சிவகார்திகேயன் நடிப்பில் ஹீரோ திரைப்படமும் கார்த்தி நடிப்பில் தம்பி திரைப்படமும் ரிலீசானது.

ரசிகர்கள் மத்தியில் இந்த இரண்டு படங்களும் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று இந்த இரண்டு படங்களின் சென்னை வசூல் நல்லபடியாகவே அமைந்துள்ளது.

சிவகார்த்திகேயனின் ஹீரோ சென்னையில் மட்டும் ரூ 24 லட்சம் வசூல் செய்துள்ளது. இதுவரை மொத்தமாக சென்னையில் ரூ 2.09 கோடி வசூல் செய்துள்ளது.

தம்பி திரைப்படம் சென்னையில் நேற்று மட்டும் ரூ 28 லட்சம் வசூலித்துள்ளது. 5 நாளில் ரூ 1.56 கோடி வசூல் செய்துள்ளது.

இதுவரை முன்னிலையில் இருந்து வந்த ஹீரோவை தம்பி திரைப்படம் தற்போது பின்னுக்கு தள்ளி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.