ரோபோ சங்கருக்கு என்ன பிரச்சனை என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமடைந்து தற்போது வெள்ளித்திரையில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி நடிகராக கலக்கி வருபவர் ரோபோ சங்கர்.

ரோபோ சங்கரை எப்போதும் குண்டாகவே பார்த்து பழகிய ரசிகர்கள் அவர் திடீரென உடல் மெலிந்து ஒல்லியாக காணப்படும் புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அவரது இந்த உடல் தோற்ற மாற்றத்திற்கு காரணம் உடல்நல பாதிப்பு தான் என ஏற்கனவே சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதனை நடிகர் போஸ் வெங்கட் அவர்களும் உறுதி செய்திருந்தார்.

இந்த நிலையில் ரோபோ சங்கருக்கு கிட்டத்தட்ட ஆறு மாத காலம் மஞ்சள் காமாலை இருந்துள்ளது. ஆனால் இதை கவனிக்காமல் இருந்துள்ள அவர் வெளிநாட்டிற்கு சூட்டிங் சென்றிருந்த போது கடுமையான வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அப்போது மருத்துவமனை சென்று பரிசோதனை செய்த போது தான் மஞ்சள் காமாலை இருப்பது தெரியவந்துள்ளது. அதன் காரணமாகவே ரோபோ சங்கர் உடல் மெலிந்து இப்படி மாறியுள்ளார்.

டாக்டர் அவர் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என சொல்லி இருந்த நிலையில் ரோபோ சங்கர் தொடர் சிகிச்சை எடுத்து தற்போது பாதிப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக குணமாகி வருவதாக தெரியவந்துள்ளது.