ஹரிஷ் கல்யாண் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக பெண் தேடும் படலத்தை ஆரம்பித்துள்ளனர். இதனை குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

Harish kalyaan getting ready for Marriage:

தமிழ் சினிமாவில் பெண்களைக் கவர்ந்திருக்கும் ஹீரோக்களின் பட்டியலில் இருப்பவர் தான் ஹரிஷ் கல்யாண். இவர் 2010-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த ‘சிந்து சமவெளி’ திரைப்படம் மூலம் தான் ஹீரோவாக அறிமுகமாகி இருந்தார்.இதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார் ஆனால் இவருக்கு எதிர்பார்த்த  அளவிற்கு தமிழ் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் தெலுங்கு திரை உலகில் நுழைந்து மூன்று படங்கள் நடித்திருந்தார் ஆனால் அந்த மூன்று படங்களும் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை.

திருமணத்திற்கு தயாரான ஹரிஷ் கல்யாண் -வெளியான தகவல்.

இதனால் வருத்தமடைந்த இருந்த ஹரிஷ் கல்யாண் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 இல் போட்டியாளராக கலந்து இருந்தார். இதன் மூலம் இவருக்கு பெண்களின் ரசிகர் கூட்டம் உருவாகியது. இதனைத்தொடர்ந்து படவாய்ப்புகளும் அதிக கிடைக்க ஆரம்பித்த ஹரிஷ் கல்யாண் ‘பியார் பிரேமா காதல்’ மற்றும் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ ஆகிய இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டாகி இருந்தது.

திருமணத்திற்கு தயாரான ஹரிஷ் கல்யாண் -வெளியான தகவல்.

அதன் பின் நடிகர் ஹரிஷ் கல்யான்,விவேக் நடிப்பில் வெளியாகி இருந்த படம் தாராள பிரபு. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக தன்யா ஹோப் நடித்து இருந்தார். ஹிந்தி ரீமேக்கான இந்த படத்தை தமிழில் கிருஷ்ணன் மாரிமுத்து இயக்கியிருந்தார். இப்படம் வெற்றியைத் தொடர்ந்து சமீபத்தில் ஹரிஷ் கல்யாண் “ஓமன பெண்ணே” என்ற படத்தில் பிரியா பவானி சங்கர் உடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படம் OTT தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தது. 

திருமணத்திற்கு தயாரான ஹரிஷ் கல்யாண் -வெளியான தகவல்.

இதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் ஹரிஷ் கல்யாண் தற்போது திருமணத்திற்கு தயாராகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஹரிஷ் கல்யாணின் பெற்றோர் இவருக்கு விரைவில் திருமணம் செய்யப்போவதாகவும் அதற்காக பெண் தேடும் படலத்தை ஆரம்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. தனது திருமணத்தின் பொறுப்பை பெற்றோர்களிடம் முழுமையாக ஒப்படைத்து இருக்கும் ஹரிஷ் கல்யாண் பற்றிய இந்த தகவல் இணையத்தில் வைரலாகி  வருகிறது.