Hanshika and Dhanush New Movie

நடிகை ஹன்சிகா மீண்டும் தனுஷூடன் ஜோடி படம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Hanshika and Dhanush New Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா. இவர் விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ் என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

உடல் எடை கூடி போனதால் வாய்ப்பு இல்லாமல் சினிமாவை விட்டு வெளியேறினார். தற்போது தன்னுடைய உடல் எடையை மொத்தமாக குறைத்து குச்சி போல் என்ட்ரி கொடுத்துள்ளார்.

அதர்வாவுக்கு ஜோடியாக 100 என்ற படத்தில் நடித்து இருந்ததை தொடர்ந்து மகா என்ற படத்தில் சிம்புவுடன் இணைந்து நடித்துள்ளார்.

மேலும் யோகி பாபுவுடன் ஒரு படத்தில் நடித்துள்ளார். வெப்சீரிஸ் ஒன்றை கையில் வைத்துள்ளார்.

இவைகளைத் தொடர்ந்து நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் தனுஷ் கதையில் மித்ரன் ஜவஹர் ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் தான் நடிகர் தனுசுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவர்கள் ஏற்கனவே மாப்பிள்ளை என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

இந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக இந்தக் கூட்டணி அமைய உள்ளதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மித்ரன் ஜவஹர் ஏற்கனவே நடிகர் தனுஷை வைத்து உத்தமபுத்திரன், குட்டி, யாரடி நீ மோகினி ஆகிய படங்களை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.