ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் உதவி கேட்டு பதிவிட்ட கல்லூரி மாணவிக்கு உடனடியாக உதவி செய்துள்ளார்.

கோலிவுட் திரை உலகில் பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகராக திகழ்பவர் தான் ஜி.வி.பிரகாஷ் குமார். தனது இசையால் பல ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த இவர் தற்போது ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து அசத்தி வருகிறார். அண்மையில் சூரரைப் போற்று படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை பெற்ற ஜி வி பிரகாஷ் குமாரை பலரும் பாராட்டி வந்ததைத் தொடர்ந்து தற்போது கல்லூரி மாணவிக்கு கல்வி கட்டணம் செலுத்த உதவி செய்ததற்கு அவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

மாணவியின் வேண்டுகோளை நிறைவேற்றிய ஜிவி பிரகாஷ்!!!…. பாராட்டும் ரசிகர்கள்!.

அதாவது, கும்பகோணத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஹேமப்பிரியா என்பவர் BCA டிகிரி படித்து வரும் நிலையில் அவர் தேர்வு கட்டணம் கட்ட முடியவில்லை என்றும் தேர்வு நாள் நெருங்கி விட்டதாகவும் டுவிட்டரில் தெரிவித்திருந்தார். இதனை பார்த்துவிட்டு உடனடியாக அந்த கல்லூரி மாணவியின் வங்கி கணக்கிற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பணம் அனுப்பி உதவி உள்ளார். இதற்கு அந்தக் கல்லூரி மாணவி ஜிவி பிரகாஷ் குமாருக்கு தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் நன்றி தெரிவித்து தான் தேர்வு நன்றாக எழுத தனக்கு வாழ்த்து தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இந்த பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருவதோடு ரசிகர்கள் அனைவரும் ஜி.வி.பிரகாஷை பாராட்டி வருகின்றனர்.

மாணவியின் வேண்டுகோளை நிறைவேற்றிய ஜிவி பிரகாஷ்!!!…. பாராட்டும் ரசிகர்கள்!.