GV Prakash About Vadivasal

சூர்யாவின் ரசிகர் ஒருவர் வாடிவாசல் திரைப்படத்தின் அப்டேட் கேட்டதற்கு ஜிவி பிரகாஷ் பதிலளித்துள்ளார்.

GV Prakash About Vadivasal : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் சூரரைப்போற்று வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையிலும் சூர்யா நடித்து வரும் திரைப்படம் வாடிவாசல்.

சூர்யாவின் ரசிகர் ஒருவர் இந்தத் திரைப்படத்தின் அப்டேட் பற்றி ஜிவி பிரகாஷிடம் கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த ஜிவி பிரகாஷ் “சீக்கிரமாகவே வந்துவிடும் என்றும் அற்புதமான எதிர்பார்ப்புகள் வந்துகொண்டே இருக்கிறது என்று கூறியுள்ளார். இந்த பதில் சூர்யா ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.