Government Order Distribution Function
Government Order Distribution Function

Government Order Distribution Function : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி மு. பழனிசாமி அவர்கள் இன்று (27.7.2020) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைத் துறையில் 2018-19 மற்றும் 2019-2020-ஆம் ஆண்டுகளுக்கான 105 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தமிழ்நாடு அமைச்சுப்பணி தொகுதியின் கீழ் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் திரு.க.சண்முகம், இ.ஆ.ப., நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் திரு. ஆ.கார்த்திக், இ.ஆ.ப., நெடுஞ்சாலைத் துறை முதன்மை இயக்குநர் திரு.ரெ. கோதண்டராமன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

அதேபோல் இன்று (27.7.2020) தலைமைச் செயலகத்தில், 2016 – 2019ஆம் ஆண்டுகளுக்கான காவல் துணை கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (குரூப் – 1) மூலமாக தெரிவு செய்யப்பட்ட 90 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 14 நபர்களுக்கு காவல் துணை கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

மேலும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில், மாவட்ட அலுவலர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (குரூப் – 1) மூலமாக தெரிவு செய்யப்பட்ட 3 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் வழங்கினார்.

இந்த நிகழ்வின் போது, தலைமைச் செயலாளர் திரு.க. சண்முகம், இ.ஆ.ப., உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.எஸ்.கே. பிரபாகர், இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் திரு. து.மு. திரிபாதி, இ.கா.ப., தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு) முனைவர் சி. சைலேந்திர பாபு, இ.கா.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.