Gouri Kishan

Gouri Kishan : 96 பட குட்டி ஜானுவாக நடித்த கௌரியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் சி. பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருந்த திரைப்படம் 96.

ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற இந்த படத்தில் பள்ளி பருவ விஜய் சேதுபதியாக எம்.எஸ் பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கர் நடித்திருந்தார்.

அதே போல் பள்ளி பருவ த்ரிஷாவாக தெலுங்கு நடிகையான வீணா கிஷனின் மகள் கௌரி கிஷன் நடித்திருந்தார்.

இவர்கள் இருவரது நடிப்பும் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. இப்படத்தில் மூலமாக கௌரிக்கு ரசிகர்கள் பட்டாளம் உருவானது.

அவர் அடுத்து எந்த படத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்புகள் எல்லாம் அதிகமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் அவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் ஷாக்காகி உள்ளனர்.

காரணம் இதில் கௌரி கொஞ்சம் வெயிட் போட்டு பூசலாக மாறியுள்ளார். இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக

 

View this post on Instagram

 

What you have experienced, no power on earth can take from you. ???? – @ti_tus_praj

A post shared by Gouri G Kishan (@gourigkofficial) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.