
பல கோடிக்கு விற்பனையான குட் பேட் அக்லி.. தட்டி தூக்கிய பிரபல தயாரிப்பாளர்..!
குட் பேட் அக்லி படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி வெளியாக உள்ளது.
அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இந்தத் திரைப்படம் ஏப்ரல்,மே மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்தப் படத்தின் தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திரா உரிமையை பிரபல தயாரிப்பாளரான ராகுல் 72 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
