
பிரசிடெண்ட் மகனுக்கு ஏற்பட்ட ஆபத்து, சிக்கலில் இருந்து தப்பிப்பாரா நந்தினி? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் நந்தினியின் அத்தையும் முறை பையனும் வந்து பொங்கல் சீர் கொடுக்க நந்தினி மாமா வரலையா என்று கேட்க அவரை வரலாமா என்று சொல்ல உடனே அப்பா எங்கே என்று கேட்கின்றனர் மளிகை சாமான் வாங்க போயிருக்காரு வந்துருவாரு என்று நந்தினி சொல்லுகிறார். பிறகு அனைவரிடமும் நலம் விசாரித்து விட்டு சூர்யாவை உட்கார வைத்து நந்தினி எப்படி பார்த்துகிறாஎன்று கேட்க சூப்பர் என்று சொல்லுகின்றார்.
நந்தினி ரொம்ப நல்லவ இந்த ஊருக்கே புடிச்ச பொண்ணு எங்க வீட்டுக்கு மருமகளா வரணும்னு ஆசைப்பட்டோம் ஆனால் நடக்கல பரவால்ல ஆனாலும் வசதியான இடத்துல தான் வாக்கப்பட்டு இருக்கா சந்தோஷம்தான். அங்க எங்க பொண்ண கண்ண கலங்காம பாத்துக்கோங்க என்று சொல்ல கண்டிப்பா என்று சூர்யா சொல்லுகிறார். பிறகு நந்தினி மாமா இன்னும் எவ்வளவு நாள் இங்க இருக்க போறீங்க என்று சொல்ல சூர்யா இன்னும் ரெண்டு மூணு நாள் இருப்போம் என்று சொல்லுகிறார். நந்தினியும் ஆமாம் என்று சொல்ல இந்த பொங்கல் திருவிழா எல்லாம் சூப்பரா நடக்கும் போட்டிங்களோ பரிசு கொடுக்கிற ஃபங்ஷன் நடக்கும் இதெல்லாம் பார்த்துட்டு கலந்துக்கோங்க என்று கூப்பிடுகிறார். பிறகு அவர்களும் கலந்து கொள்ள சம்மதம் தெரிவிக்கின்றன. மறுபக்கம் நந்தினியின் மாமா போட்டிக்கான விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டு இருக்க சூர்யா டிராக்டரில் குடும்பத்துடன் வந்து இறங்குகிறார். நந்தினியின் அத்தை அனைவரையும் வரவேற்று போட்டிக்கு அழைத்து செல்கின்றனர்.
பொங்கல் போட்டி நடக்கும் இடத்தில் புருஷன் பொண்டாட்டிகாண கேம் என்று சொல்ல அதில் சூர்யாவும், நந்தினியும் கலந்துக்க சொல்லுகின்றனர் அதில் புருஷனின் கண்ணை கட்டி விட்ட பிறகு கரெக்டாக மனைவியை கண்டுபிடிக்க வேண்டும். குரல் மட்டும் கொடுக்கலாம் என்று சொல்ல அனைவரின் கண்ணையும் கட்டுகின்றனர். ரஞ்சிதா புனிதாவிடம் கரெக்டா கண்டுபிடிச்சிடுவாரா என்று சொல்ல பார்க்கலாம் என்று பேசி கொள்கின்றனர்.
சூர்யா ரஞ்சிதாவிடம் போனை கொடுத்து இங்கு நடக்கிற எல்லாத்தையும் வீடியோ எடுக்க சொல்லுகிறார். பிறகு சூர்யாவின் கண்ணை கட்டுகின்றன. பிறகு அனைவரையும் சுத்தவிட்டு கண்டுபிடிக்க சொல்லுகின்றனர். சூர்யாவிற்கு குடும்பத்தினர் அனைவரும் வழிகாட்டுகின்றனர். சூர்யாவை சார் என்று கூப்பிட்டு வழிகாட்ட ,நந்தினி அத்தை சேர் எல்லாம் கூப்பிடாதமா என்று சொல்ல இருங்க அத்தை என்று சொல்லி விட்டு,சூர்யாவிற்கு வழிகாட்ட கரெக்டாக நந்தினி கைகாட்டி நிற்கிறார். பிறகு அனைவரும் கோணிப்பை உள்ளே காலை விட்டு கோணிப்பை ரேஸ் விளையாடுகின்றனர். அதுலயும் சூர்யா முதலில் வருகிறார். பிறகு ஊர் பெரியவர்கள் கையால் நந்தினி சூர்யாவிற்கும் பரிசு கொடுக்கின்றனர்.
பிறகு முறைமாமன் அத்த பையன் என யார் மேலே வேண்டுமானாலும் கலர் பூசி மஞ்சள் தண்ணீர் ஊற்றி விளையாடலாம் என்று சொல்ல, நந்தினி தங்கைகளுடன் அனைவரும் கலர் பொடியை தூவி ஓடு விளையாடுக்கள் இருக்கின்றனர். மறுபக்கம் சுதாகர் பிரசிடென்ட் பையனின் நிற்க வைத்து என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்க என்ன செய்யணும் நான் பண்றேன் என்று சொல்ல அவர் டிக்கியில் இருந்து ஒரு கலர் பொடியை எடுத்து அவன் முகத்தில் பூசி விட்டு இப்பதான் அழகா இருக்க என்று சொல்லி அவரிடம் ஒரு திட்டத்தை சொல்லுகிறார். சொல்லிட்டீங்களா இப்ப என்ன பண்றேன்னு மட்டும் பாருங்க என்று சொல்லி புனிதா விளையாடும் இடத்திற்கு வந்து நின்று அவரை மோதி நிற்க வைக்கிறார். இதனை நந்தினி பார்த்துவிட அதிர்ச்சியாகி நிற்கிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் பிரசிடெண்ட் மகனை நந்தினி துரத்தி ஓடி வந்து என் தங்கச்சி கிட்ட வம்பு பண்ணாதன்னு சொன்னா பண்ணுவியா என்று இருவருக்கும் இடையே சண்டை ஏற்படுகிறது.
நந்தினி அவனை அறைந்து அடிக்க கையில் இருக்கும் பவுடரை நந்தினியின் கண்ணில் ஊதிவிட, நந்தினி அவனை தள்ளி விடுகிறார். இதனால் டிராக்டரில் தலை இடித்து ரத்தம் வருகிறது. இதனால் பிரசிடெண்ட் மகன் மயக்கமாகிவிட அனைவரும் ஓடி வருகின்றனர். நந்தினி கண்களை திறந்து பார்த்து அதிர்ச்சி அடைகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்த தெரிந்து கொள்வோம்.
