
மயூவை காயப்படுத்தும் ஈஸ்வரி, பாக்யா சொன்ன வார்த்தை,இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
மயூவை ஈஸ்வரி காயப்படுத்த பாக்யா வார்த்தை ஒன்றை சொல்லியுள்ளார்..

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி செழியன் இனியா என மூவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். பாக்யாவையும் கோபியையும் ஒன்றாக சேர்ந்து வாழ வைக்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்க செழியன் அதெல்லாம் அவ்ளோ சீக்கிரம் நடக்காது பாட்டி அதுக்கு ரொம்ப பெரிய பிராசஸ் இருக்கு என்று சொல்லுகிறார்.
அதற்கு ஈஸ்வரி நீ கூட தான் அந்த மாலினி கூட போன திருப்பியும் ஜெனி உன்ன மன்னிச்சு ஏத்துக்களையா என்று சொல்ல இது வேற அது வேற பாட்டி அவங்க டைவர்ஸ் கொடுக்கணும் கொடுப்பாங்களா என்று கேட்க உங்க அப்பா மட்டும் உங்க அம்மாவுக்கு டைவர்ஸ் கொடுத்துட்டு போனாலும் நீங்க எதிர்பார்த்தீர்களா இல்ல இல்ல அதனால எல்லாமே நடக்கும் நான் சொன்னா பலிக்கும் என்று சொல்லி பேசிக் கொண்டிருக்கின்றனர். பிறகு இனியா கோபியிடம் காலேஜில் நடக்கும் பங்க்ஷன் குறித்து பேசிக்கொண்டிருக்க அதற்கு ஆயிரம் ரூபாய் பணம் கட்ட வேண்டும் கொடுக்கிறீர்களா டாடி என்று சொல்ல ஆயிரம் ரூபாய் என்னடா பத்தாயிரம் கூட கொடுக்கிறேன் என்று சொல்ல இதைக் கேட்டுக் கொண்டிருந்த பாக்யா நான் தானே இவ்வளவு நாளா கொடுத்துட்டு இருந்தேன். நானே கொடுக்கிறேன் என்று சொல்ல ஏன் கோபி கொடுக்க கூடாதா என்று ஈஸ்வரி கேட்கிறார். உடனே கோபி பீஸ் பாக்கியாவே கொடுக்கட்டுமா நான் டிரஸ் எல்லாம் எடுத்து கொடுத்து இருக்கேன் என்று சொல்ல அமைதியாக இருக்கின்றன.
அந்த நேரம் பார்த்து மயூ ஸ்கூலில் இருந்து வர கோபி அவர்களை உட்கார வைத்து விசாரிக்கிறார். மயூரா கோபியிடம் இன்னைக்கு டிராயிங் இல் நான் ஃபர்ஸ்ட் பிளேஸ் வந்த என்று சொல்ல கோபி சந்தோஷப்பட்டு கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பார் இதனால் இனியா மற்றும் ஈஸ்வரியின் முகம் மாற கோபி மயூவிடம் என்ன வேணும் ஏதாவது கிப்ட் வாங்கி தரவா என்று சொல்ல என்ன வேண்டும் என்று கேளு என்று சொல்லுகிறார் உடனே சின்ன சின்ன பொருள் போடுறதுக்கு ஒரு பவுச் வாங்கி கொடுத்த போதும் என்று சொல்ல பெருசா கேலு மயூ என்று கோபி சொல்லுகிறார். ஆனால் மயூ எனக்கு இது போதும் என்று சொல்ல சரி நான் போய் ரெடி ஆயிட்டு வரேன் என்று மேலே போன பிறகு ஈஸ்வரி மயூவிடம் பேசுகிறார்.
உங்க அம்மாவால தான் அவனுக்கு அப்படி ஆச்சு நீ சும்மா இருக்க மாட்டியா உன்னை வெளியில கூட்டிட்டு போகணுமா நீ எதுக்கு வார்த்தைக்கு வார்த்தை அப்பானு சொல்ற என்று பேச பாக்யா இப்ப எதுக்கு இதெல்லாம் பேசிக்கிட்டு இருக்கீங்க என்று சொல்ல ஈஸ்வரி எதுவும் கேட்காமல் என்னமோ இவன்தான் உங்க அப்பா மாதிரி பேசுற கோபி செழியன், இனியா, எழிலுக்கு மட்டும் தான் அப்பா உனக்கு கிடையாது உனக்கு குடிகாரன் ஒருத்தன் இருப்பான் பாரு என்று சொல்ல அந்த நேரம் பார்த்து ராதிகா இதையெல்லாம் கேட்டு விடுகிறார். மயூ கண்கலங்கி அழ ராதிகா வந்தவுடன் கட்டிப்பிடித்து அழுகிறார். உடனே ஈஸ்வரி இதை வாங்கிக் கொடு அதை வாங்கி கொடுன்னு ஒரே தொல்லை என்று சொல்லு ராதிகா எது வேணும்னாலும் என்கிட்ட கேட்க வேண்டியதுதானே மயூ என்று சொல்ல நான் கேக்கலமா டாடிதா என்ன வேணும்னு கேட்டாரு அதனால தான் நான் பௌச் கேட்டேன் என்று சொல்ல சரிவா நான் வாங்கி தரேன் என்று சொல்ல, கோபி வருகிறார். சரி போகலாம் என்று கிளம்ப வேண்டாம் நானே கூட்டிட்டு போறேன் என்று ராதிகா அழைத்துச் செல்கிறார் உடனே கோபி இடம் ஈஸ்வரி நீதான் கூட்டிட்டு போறேன்னு சொல்ற இல்ல எப்படி மதிக்காம கூட்டிட்டு போறா பாரு என்று அப்படியே மாத்தி பேச பாக்கியா டென்ஷன் ஆகிறார். ஈஸ்வரி நீ இனியாவ கூட்டிட்டு வெளியே போயிட்டு வா அவளுக்கு டிரஸ் எடுக்கணும்னு சொன்னேன்ல எடுத்துக் கொடு என்று சொல்ல பாக்யா எதுவும் பேசாமல் கோபமாக சென்று விடுகிறார்.
பிறகு காரில் சோகமாக மயூ இருக்க ராதிகா அவரை சமாதானப்படுத்த இரண்டு கிப்ட் வாங்கலாம் ஐஸ்கிரீம் வாங்கலாம் என்றெல்லாம் பேச மயூ எதுவும் பேசாமல் அழுகிறார். நீங்கள் டாடி என்று கூப்பிட சொன்னீங்க அப்புறம் ஏன் என்னை பாட்டி திட்டுறாங்க என்று சொல்ல அவங்க பேசுறது எல்லாம் பெரிசா எடுத்துக்காதம்மா உன்னோட சந்தோஷத்துக்காக நான் சில முடிவுகள் எடுத்த ஆனால் அது உனக்கு கஷ்டத்தை தான் கொடுக்குது சாரிமா, ரெண்டு வருத்தப்பட பாட்டி பேசுவதற்கு நீங்க என்ன பண்ணுவீங்க விடுங்க மம்மி என்று சொல்லுகிறார். நம்ம கடைக்கு போயிட்டு ஷாப்பிங் பண்ணிட்டு ஐஸ்கிரீம் சாப்பிட்டு என்ன வேணுமோ வாங்கி சாப்பிட்டு வரலாம் என்று சொல்லி சமாதானப்படுத்துகிறார்.
மறுபக்கம் ஈஸ்வரிக்கு மாத்திரை கொடுக்க வந்த பாக்யா கோபமாக இருப்பதை பார்த்து ஈஸ்வரி பிரண்டோட பொண்ணு திட்டிட்டேன்னு மூஞ்ச தூக்கி வச்சு இருக்கியா என்று சொல்ல ஏமாத்த நீங்க பண்ணது ரொம்ப பெரிய தப்பு உங்க பையன் ராதிகாவுக்கு பொண்ணு இருக்குது தெரிஞ்சு தான் கல்யாணம் பண்ணி இருக்காரு அவருக்கு மயூவ பாத்துக்குறேன் ரெஸ்பான்சிபிலிட்டி இருக்கு. அவ அப்பானு கூப்பிடாம வேற என்னன்னு கூப்பிடுவா ஒரு சின்ன பொண்ணு கிட்ட பேசுற மாதிரியா நீங்க பேசினீங்க என்று பேச இப்பெல்லாம் நீ ரொம்ப ஓவரா பேசுற பாக்கியா என்று சொல்ல மாமா இருந்திருந்தால் நீங்க எந்த அளவுக்கு நடந்து இருக்காது. அவர் பேச வேண்டிய இடத்துல தான் நான் பேசிகிட்டு இருக்கேன் நான் மாமாவ ரொம்பவே மிஸ் பண்றேன் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
கோபி போனில் இனியாவுடன் வெளியே போயிட்டு வந்த வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கிறார் . ராதிகா ரூமுக்கு வர என்ன கேட்கிறார்? அதற்கு கோபி என்பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
