Web Ads

பிக் பாஸ் கிராண்ட் பினாலே : மகுடத்தை சூடப்போவது யார்..?வைரலாகும் வீடியோ.!!

பிக் பாஸ் கிராண்ட் பினாலே நாளை தொடங்க உள்ளது.

Bigg Boss Tamil Season 8 GrandFinale Update
Bigg Boss Tamil Season 8 GrandFinale Update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி நாளையுடன் பிரம்மாண்டமாக முடிவுக்கு வர உள்ளது. டாப் 5 போட்டியாளர்களாக முத்துக்குமரன், சௌந்தர்யா, ரயான், விஷால் ,பவித்ரா இருக்கின்றனர். இந்த ஐந்து பேரில் யார் வெற்றி மகுடம் சூட்டப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்ப ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது.

நாளை மாலை 6:00 மணிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிராண்ட் பினாலேவை கண்டு மகிழலாம். இந்த ஐந்து பேரில் உங்களுடைய ஃபேவரைட் போட்டியாளர் யார் என்றும் யார் வெற்றி பெற வேண்டும் என்பதையும் எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.