
விஜய் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்.. திரிஷா ஓபன் டாக்..!
விஜய் குறித்து பேசி உள்ளார் திரிஷா.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி சாமி, கில்லி ,திருப்பாச்சி , ஆறு, குருவி, விண்ணைத்தாண்டி வருவாயா, என்னை அறிந்தால், கொடி ,லியோ போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
தளபதி விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தில் கெஸ்ட் ரோலில் ஒரு பாடலுக்கு நடனமாடியும் இருந்தார். சமீபத்தில் நடந்த கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு இவர்கள் இருவரும் தனி விமானத்தில் சென்றிருந்தது பேசும் பொருளாக மாறி இருந்தது.
இந்த நிலையில் திரிஷா விஜய் குறித்து பேசிய பழைய பேட்டி ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.அதில் விஜய் ரொம்பவே அமைதியானவர் நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறோம்.விஜய் எப்போதுமே எனக்கு ரொம்பவே ஸ்பெஷலான ஒரு ஆள். அவர் ரொம்பவே ப்ரொபஷனல் ஆக இருப்பார் எவ்வளவு ஹிட் படங்களை கொடுத்தாலும் ரொம்ப எளிமையாகவே இருப்பார் என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பேட்டி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
