Go Back Modi :
Go Back Modi :

Go Back Modi : சென்னை: பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வர உள்ள நிலையில், மீண்டும் டுவிட்டரில் go_back மோடி டிரெண்டிங் ஆகி வருகிறது.

முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாமக தலைவர் ராமதாஸ், தமாகா தலைவர் ஜி கேவாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களுடன் கோவையில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதால்,

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை மைசூரில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வருகிறார்.

பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் ‘go_back modi’ என்று டுவிட்டரில் டிரெண்ட் ஆவது வழக்கமாக உள்ளது.

மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டரில் டிரெண்ட் செய்வதை குறிப்பாக, தமிழகத்தில் பலர் வாடிக்கையாக வைத்திருக்கின்றனர்.

இந்நிலையில், இன்று வழக்கம் போல் பிரதமர் நரேந்திரமோடி கோவை வருவதை எதிர்த்து டுவிட்டரில் ‘go_back modi’ என டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

மேலும் இதற்கு போட்டியாக பாஜக “pm modi welcome_ to tamilnadu” என டிரெண்ட் செய்வதும் வழக்கமான ஒன்றே.

எனினும் இதையெல்லாம் மோடி ஒரு போதும் கண்டுகொள்ளவதில்லை. இதற்கு எவ்வித பதிலும் மோடி அளிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்றே.

எனவே இன்று மீண்டும் டிவிட்டரில் மோடி வருகையை எதிர்த்து “go_back modi” டிரெண்ட் அகி வருகிறது.,

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.