silk smitha

நடிகை சில்க் ஸ்மிதா போலவே உள்ள ஒரு பெண்ணின் வீடியோ வெளியாகி பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

Girl Video Goes Viral Who Look Like Silk Smitha : 80களில் பெரும்பாலான தமிழ் சினிமாக்களில் வலம் வந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா.

ரஜினி, கமல் என முன்னணி ஹீரோக்கள் நடிக்கும் திரைப்படங்களில் கூட வெற்றிக்காக சில்க் ஸ்மிதாவை தயாரிப்பாளர்கள் ஒருபாடல் காட்சியில் நடிக்க வைத்தனர்.

கவர்ச்சி நடனம் மட்டுமில்லாமல் நடிகர் பிரபுவுக்கு ஜோடியாக கோழி கூவுது உள்ளிட்ட பல படங்களில் சில்க் ஸ்மிதா நடித்துள்ளார்.

சொந்த பிரச்சனை காரணமாக அவர் 1996ம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், அச்சு அசல் அவரைப் போலவே தோற்றமளிக்கும் ஒரு பெண்ணின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

முகவெட்டு, கண்கள், மூக்கு என அனைத்தும் சில்க் ஸ்மிதா போலவே இருக்கிறது. அந்த வீடியோவை நெட்டிசன்கள் ஆச்சர்யத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.