நடிகர் விஜய் ரியல் ஹீரோதான் என அவருக்கு ஆதரவாக பாஜகவைச் சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் கருத்து தெரிவித்துள்ளார்.

Gayathri Raghuram Support to Vijay : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் சில வருடங்களுக்கு முன்னே இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் காருக்கு நுழைவு வரிக்கு தடை விதிக்கக் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

நடிகர் விஜய் ரியல் ஹீரோதான்.. தளபதிக்கு ஆதரவாக பாஜக பிரபலம் - யார் அவர் தெரியுமா??

இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி விஜய்க்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். நடிகர்கள் அறியல் ஹீரோவாக இருக்க வேண்டும் ரீல் ஹீரோவாக இருக்கக் கூடாது. வரி என்பது நன்கொடை அல்ல கட்டாய பங்களிப்பு அதனை செலுத்தியாக வேண்டும் எனக் கூறி விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து இருந்தார். இந்த தொகையை இரண்டு வாரங்களுக்குள் செலுத்த அவகாசம் கொடுத்துள்ளார்.

சங்கரன்கோவில் ஆடித்தபசு : 12 நாள் திருவிழா தொடங்கியது

இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தற்போது நடிகை காயத்ரி ரகுராம் விஜய் ரியல் ஹீரோ தான். பல ஏழைகளின் வாழ்க்கையில் அவர் இருக்கிறார். பல மாணவர்களின் கல்விக்கு உதவி வருகிறார். ரசிகர்களின் குடும்பத்திற்கு உதவுகிறார். அவர் செய்து வரும் நல்ல விஷயங்களையும் மறந்துவிடக் கூடாது என கூறியுள்ளார்‌.

முடிவுக்கு வரும் Valimai படப்பிடிப்பு – வெளியான Massive Update | Thala Ajith | H.Vinoth | Yuvan