
Gaja Relief : கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண உதவிகள் மேற்கொள்ள தமிழக அரசு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
கஜா புயல் கரையை கடக்கும் தகவல் அறிந்து தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இதன் காரணமாக பல சேதங்களை முன்கூட்டியே தவிர்த்துள்ளோம், உயிர்சேதம் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன.
மேலும் தாழ்வான பகுதிகளில் இருந்த மக்களை பாதுகாப்போடு வெளியேற்றி, முகாம்களில் தங்க வைக்கபட்டனர். அவர்களுக்கு உணவு, உடை, போர்வை போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், “கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் அளிக்கப்படும் ” என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். மேலும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்று இன்று பார்வையிட உள்ளார்.