மோதலில் சிவானி, கேப்ரெல்லா

பாலாஜி செய்த வேலையால் முதல் முறையாக சிவானி மற்றும் கேப்ரில்லா ஆகியோர் மோத தொடங்கியுள்ளனர்.

தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

நிகழ்ச்சி நாற்பதாவது நாளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இன்றைக்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி இருந்ததை தொடர்ந்து தற்போது இரண்டாவது புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில் பாலாஜி செய்த வேலையால் கேப்ரில்லா அவரிடம் சத்தம் இடுகிறார். காதலனிடம் சண்டையிடுவது போல பேசியதால் சிவானி பாலாஜிக்கு ஆதரவாக சண்டையிடுகிறார்.

இறுதியில் சிவானி மற்றும் கேப்ரில்லா இடையே மோதல் உருவாகியுள்ளது. இந்த சண்டைகளுக்கு நடுவே நான் ஒரு விஷயம் சொல்லட்டுமா என ரியோ ஆரம்பித்து வெல்கம் டு பிக் பாஸ் சீசன் 4 என காமெடி செய்கிறார்.

இதோ அந்த வீடியோ