மதத்தை வைத்து விமர்சித்த நபருக்கு பதிலடி கொடுத்துள்ளார் ஃபரீனா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஃபரீனா.

சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருவது மட்டுமல்லாமல் ரசிகர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார். இந்த நிலையில் ரசிகர் ஒருவர் நீங்க முஸ்லிம் தானே தூங்குது எல்லாம் செய்வீங்க அப்படி இருக்கும்போது ஏன் கெடுதல் செய்கிறீர்கள் என கேள்வி எழுப்பி உள்ளார்.

இதைப் பார்த்த பரீனா கடுப்பாகி அந்த நபருக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார். டிவி சீரியலில் பார்த்து ஒருவரைப் பற்றி விமர்சனம் செய்வது சரியானது இல்லை, ஒருவரை விமர்சிப்பதற்கு முன்னர் உங்களது பின்புறம் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் என விமர்சித்துள்ளார்.