சந்திரமுகி படத்தை அப்படியே காப்பி அடித்துள்ள சன் டிவியை ரசிகர்கள் கலாய்த்து எடுத்து வருகின்றனர்.

Fans Trolls Sun Tv Serials : தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கான பெயர் போன மிகவும் பிரபலமான தொலைக்காட்சி சேனல் என்றால் அது சன் டிவி தான். இந்த தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

அப்படி இருக்கையில் தற்போது தினமும் இரவு எட்டு மணிக்கு ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல மற்றும் எட்டு முப்பது மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் மனைவி ஆகிய சீரியல்கள் மெகா சங்கமம் என்ற பெயரில் ஒரு மணி நேரமாக இணைந்து ஒளிபரப்பாகி வருகிறது.

ஒரு அரண்மனையை வைத்து அந்த அரண்மனையில் பேய் இருப்பதாக சொல்லி கதைக்களம் நகர்ந்து வரும் நிலையில் இதை அப்படியே சந்திரமுகி படத்தை காப்பி அடித்தது போலவே இருப்பதாக ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.