Fans expect Chandramukhi part 2
Fans expect Chandramukhi part 2

Fans expect Chandramukhi part 2

இந்தி சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகிறதாம். இதனால் தமிழிலும் சந்திரமுகி 2 வருமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

பாபா படம் ரஜினியின் கரியர் குறித்த பல விமர்சனங்களை முன்வைத்தன. “ரஜினிக்கு வயதாகிவிட்டது. முகத்திலும் முதிர்ச்சி தெரிய தொடங்கிவிட்டது. அவர் இனி அவ்வளவுதான்.

பாபாவின் தோல்வியில் இருந்து அவர் மீழ்வது சிரமம்” என வெளிப்படையாகவே பேசத் தொடங்கினார்கள். எதற்கும் செவி சாய்க்காத ரஜினி, மூன்று ஆண்டுகள் இடைவெளி எடுத்துக் கொண்டார். பின்னர் 2005-ம் ஆண்டு சந்திரமுகியின் மூலம் அதிரடியாக கம் பேக் கொடுத்தார்.

சந்திரமுகி படத்தின் ப்ரிவ்யூ காட்சியை பார்த்த ரஜினி, இது டபுள் பாட்ஷா என பி.வாசுவிடம் கூறினார்.

அதனால்தான் அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தைரியமாக ” நான் யானை இல்ல குதிரை.. விழுந்தா டக்கென எழுந்து விடுவேன்” என பேசினார்.

இந்த அஜித் நாயகிதான் அடுத்த நயன்தாராவாம் – எப்படி தெரியுமா?

அந்தளவு சந்திரமுகி படத்தை அவர் மலை போல் நம்பினார். அவர் எதிர்பார்த்தது போலவே படம் வருடக்கணக்காக ஓடி வசூல் சாதனைகள் படைத்தது. ரஜினியை விமர்சித்தவர்கள் கூட வாயடைத்து போகும் அளவு அந்த படத்தின் வெற்றி பேச்சுப் பொருளானது.

அதன்பின் இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்தார்கள். அக்‌ஷய் குமார், வித்யா பாலன் ஆகியோர் இப்படத்தில் நடித்தார்கள்.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகிறதாம். இதனால் தமிழிலும் சந்திரமுகி 2 வருமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.