Fans Celebrates Velan First Look

வேலன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்து உள்ளனர்.

Fans Celebrates Velan First Look : தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக தமிழ்நாட்டில் பிரபலமானார் முகென் . அவர் பாடல்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது. இறுதியாக பிக்பாஸ் டைட்டிலையும் வென்றார். இதையடுத்து தமிழ் சினிமாவில் பல முன்னணி இயக்குநர்களிடம் இருந்நு முகேனுக்கு ஹீரோ வாய்ப்பு குவிந்து வருகிறது.

தற்போது Skyman Films International நிறுவனம் தயாரிக்கும் வேலன் என்ற படத்தில் முகேன் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் பிரபு, சூரி, மீனாட்சி , தம்பிராமையா போன்ற பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் அவருடன் இணைந்து நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் துல்கர் சல்மான் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் . இதுவரை முகேனை மார்டன் பையனாக பார்த்த ரசிகர்கள் வேலன் பட Firstlook ல் வேஷ்டி சட்டையுடன் கிராமத்து பையனாக மாறிருந்தது ரசிகர்களுக்கு செம்ம சர்பிரைஸ்.. Poster வெளியான சில மணி நேரங்களிலேயே திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்தனர் பட குழுவினர்.