Web Ads

விஜய்க்காக ரசிகர் கொடுத்த பரிசு.. அன்பாக வாங்கிக் கொண்ட விஜய், வைரலாகும் வீடியோ..!

விஜய்க்காக ரசிகர் பரிசு ஒன்றை கொடுத்துள்ளார்.

fan gift for thalapathy vijay
fan gift for thalapathy vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். தற்போது இவர் ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

எச் வினோத் இயக்கத்திலும் கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகி வரும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, கௌதம் மேனன், பாபி தியோல், போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இது விஜயின் இறுதி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கசக்கமாக இருந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து முழு நேர அரசியலில் விஜய் ஈடுபடுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் விஜய் காரில் செல்லும்போது கையில் பரிசு பொருளுடன் அவருக்காக காத்திருந்த நிலையில் விஜய் அந்த பொருளை வாங்கிக் கொண்டுள்ளார் அது வேறொன்றும் இல்லை தங்கத்தால் ஆன பெண் ஒன்றை பரிசளித்துள்ளார். அந்தப் பரிசு பொருளை விஜய் வாங்கிக் வாங்கிக் கொண்டதால் அந்த ரசிகர் மிகவும் உற்சாகமடைந்துள்ளார்.

தற்போது இந்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.