பிரபல திரைப்பட நட்சத்திரங்கள் பட்டியலில் முதல் இடத்தை நடிகர் விஜய் மற்றும் சமந்தா பிடித்துள்ளதை ஆர்மேக்ஸ் ஸ்டார்ஸ் இந்தியா நிறுவனம் பதிவிட்டுள்ளது.

சமீப காலமாகவே பாலிவுட் திரைப்படங்களை தாண்டி இந்திய அளவில் தென்னிந்திய திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்று வருகின்றன.

அந்த வகையில் தற்போது இந்திய அளவில் மிகவும் பிரபலமான சினிமா நட்சத்திரங்களின் பட்டியலை “ஆர்மேக்ஸ் ஸ்டார்ஸ் இந்தியா” நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதில் நடிகர்கள் பட்டியலில் நடிகர் விஜய் முதல் இடத்தை பிடித்துள்ளார். மேலும் நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தை நடிகை சமந்தா பிடித்துள்ளார். இதையறிந்த தென்னிந்திய ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தோடு இதனை வைரலாக்கி வருகின்றனர்.