நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவர் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK, K.V ஆனந்த் இயக்கத்தில் புதிய படம் என அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இறுதியாக சூர்யாவின் நடிப்பில் தானா சேர்ந்த கூட்டம் படம் வெளியாகி இருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் வசூலில் பின் தங்கி இருந்ததாகவே தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் மீண்டும் சூர்யாவுடன் இணைய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய அந்த பேட்டியில் மீண்டும் இணைந்தால் அந்த படம் வேற லெவலில் இருக்கும் எனவும் கூறியுள்ளார்.