நடிகை குஷ்பு பேட்டி ஒன்றில் வாரிசு படப்பிடிப்பு தளத்தில் விஜய் பற்றின சுவாரசியமான தகவலை பகிர்ந்திருக்கிறார்.

கோலிவுட் திரை உலகில் தளபதியாக ரசிகர்களின் மத்தியில் வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதில் கதாநாயகியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க யோகி பாபு, குஷ்பூ, பிரபு, சரத்குமார், ஷாம் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

நடிப்பின் மீது அவ்வளவு காதல் கொண்டவர்!!… நடிகர் விஜய் குறித்து சுவாரசியமான தகவலை பகிர்ந்த பிரபல நடிகை!.

தில் ராஜு தயாரிப்பு தமன் இசையில் உருவாகியுள்ள இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த விஜய் பற்றின ஒரு சுவாரசியமான தகவலை நடிகை குஷ்பூ பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.

நடிப்பின் மீது அவ்வளவு காதல் கொண்டவர்!!… நடிகர் விஜய் குறித்து சுவாரசியமான தகவலை பகிர்ந்த பிரபல நடிகை!.

அதில் அவர், வாரிசு படத்தின் சண்டைக் காட்சியின் போது விஜய்க்கு திடீரென்று காய்ச்சல் வந்துவிட்டது ஆனால் அவர் ஷூட்டிங்கை நிறுத்தினால் மற்ற நடிகர்கள் மற்றும் டெக்னீஷன்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற காரணத்தால் அந்த சண்டை காட்சியை முழுவதும் நடித்து முடித்தார், நடிப்பின் மீது அவ்வளவு காதல் கொண்டவர் என்றும் நடிகை குஷ்பு, விஜய் குறித்து பகிர்ந்துள்ளார்.