டான்ஸ் மாஸ்டர் ஆன சாண்டியுடன் இணைந்து நடிகை அதிதி சங்கர் சூப்பராக ஒரு குத்தாட்டம் போட்டு உள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

இந்திய திரை உலகில் பிரம்மாண்ட இயக்குனராக அனைவருக்கும் பரிச்சயமானவர்தான் ஷங்கர். இவரது மகளான அதிதி ஷங்கர் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கும் கார்த்தியின் விர்மன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியுள்ளார். தனது முதல் படத்திலேயே அனைத்து ரசிகர்களின் மனதிலும் ஆழமாக பதிந்த இவர் தற்பொழுது சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

சாண்டி மாஸ்டருடன் சூப்பர் குத்தாட்டம்!!… பிரபல நடிகையின் வீடியோ வைரல்!.

இந்நிலையில் நடனத்தின் மீது அதிக ஆர்வம் கொண்ட அதிதி சங்கர் விருமன் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது பிரபல நடன இயக்குனரான சாண்டியுடன் இணைந்து ஒரு சூப்பர் குத்தாட்டம் ஒன்று போட்டுள்ளார். அந்த ரீல்ஸ் வீடியோவை சமீபத்தில் மாஸ்டர் சாண்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.