அமிர்தாவிடம் ஐ லவ் யூ என கூறியுள்ளார் எழில்.

Ezhil Proposal to Amirtha : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இது சீரியலில் பாக்கியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சுஜித்ரா.

இவருக்கு இந்த சீரியல் மூலமாக நல்ல ரசிகர் பட்டாளம் உருவாக்கியுள்ளது. அதுபோல் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ்க்கு ரசிகர்கள் மத்தியில் இருந்து மோசமான விமர்சனங்கள் வந்தாலும் அது அவருடைய நடிப்புக்கு கிடைத்த பரிசாகவே பார்க்கப்படுகிறது. அந்த அளவிற்கு மனைவிக்கு துரோகம் செய்யும் கதாபாத்திரத்தில் அவர் யதார்த்தமாக நடித்து வருகிறார்.

சென்னையில் கனமழை நீடிக்குமா? : ஆய்வு மையம் தகவல்

அமிர்தாவிடம் ஐ லவ் யூ சொன்ன எழில்.. பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து நடக்கப் போவது இதுதான் - வெளியான வீடியோ

இந்த சீரியலில் இவர்களுக்கு அடுத்ததாக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இருப்பவர் எழில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஷால். இவர் ஏற்கனவே திருமணமாகி கணவரை இழந்து ஒரு குழந்தையுடன் வாழ்த்து வரும் அமிர்தாவை காதலித்து வருகிறார்.

இவர் எப்போது காதலை தருவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அதற்கான பதில் கிடைத்துள்ளது. அமிர்தாவின் குழந்தை ஒரு பட்டனை முழுங்கிவிட்டு தடுமாற எழில் சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்து குழந்தையை காப்பாற்றுகிறார். குழந்தையை காப்பாற்றிய நன்றிக்காக எழில் என் கையை பிடித்துகொண்டு தேங்க்ஸ் கூறுகிறார் அமிர்தா.

Maanaadu Box Office Collection-ஐ வெளியிட்ட படக்குழு! | Simbu | SJ Suryah | Kalyani | Venkat Prabhu

அமிர்தாவிடம் ஐ லவ் யூ சொன்ன எழில்.. பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து நடக்கப் போவது இதுதான் - வெளியான வீடியோ

அப்போது எழில் இனியும் என்னால் மறக்க முடியாது நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன் அமிர்தா ஐ லவ் யூ என கூறுகிறார். இதற்கு அமிர்தா என்ன பதில் சொல்லப் போகிறார் என வரும் வாரத்தில் வரும் எபிசோடுகளில் தெரியவரும். இந்த ப்ரோமோ வீடியோவை விஜய் டிவி யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.