குணசேகரனுக்கு ஷாக் கொடுத்துள்ளார் ஜான்சி ராணி.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

அதாவது அந்த வீடியோவில் நந்தினி, அப்பத்தா உள்ளிட்டோர் ஜனனியுடன் சண்டை போடுவது போல பேசி என் நிலையில் இன்றைய எபிசோடில் சக்தி அப்பத்தாவிடம் சென்று நீங்க ஜனனியே இப்படி எல்லாம் பேசுறது நல்லா இல்ல என சொல்ல எந்த உரிமையில் நீ கேட்கிற உரிமை இல்லையா என கேட்க அதை ஜனனி முடிவு பண்ணட்டும் என சக்தி பதிலடி கொடுக்கிறார்.

அடுத்து குணசேகரன் ஜான்சி ராணி மற்றும் கரிகாலனை வர வைக்க இப்ப எதுக்கு வர சொன்னிங்கன்னு ஜான்சி ராணி கோபப்பட பார்த்து பேசுமா என் இடத்துக்கு வந்து பேசுற என குணசேகரன் சொல்ல இந்த அதட்டலையெல்லாம் உங்க வீட்டு பொம்பள கிட்ட வச்சுக்கோங்க என குணசேகரனுக்கு ஷாக் கொடுக்கிறார் ஜான்சி ராணி.

இதனால் இன்றைய எபிசோட் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.