EPS Question
EPS Question

EPS Question – மதுரை: வாரிசுகள் அரசியலுக்கு வரக்கூடாதா? வாரிசுகள் அரசியலுக்கு வரக்கூடாது என எந்த சட்டமும் இல்லை என மதுரையில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் மகன் ஓ.ரவீந்திரநாத் குமார் தேனி மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார்.

மகனை ஆதரித்து சோழவந்தான் மற்றும் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிகளில் ஓ.பன்னீர் செல்வம் பிரச்சாரம் செய்தார்.

நேற்று மதுரை அலங்காநல்லூர் பகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகனுடன் இணைந்து பிரசாரம் செய்தார் .

இந்நிலையில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் வாரிசு அரசியல் செய்கிறார் என்று அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் வாரிசு அரசியல் குறித்த விமர்சனத்துக்கு பதில் அளிக்கும் வகையில் கருத்து தெரிவித்து உள்ளார்.

அதில், ‘அரசியல்வாதிகளின் வாரிசுகள் அரசியலுக்கு வரக்கூடாது என்று எந்த சட்டமும் இல்லை, தகுதியின் அடிப்படையில் வாரிசுகளை மக்கள் ஏற்றுக் கொண்டால்.. வாரிசுகள் அரசியலில் வருவதற்கு அரசியலமைப்பு சட்டத்தில் உரிமை உள்ளது’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.

முன்னதாக திமுக தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில் “வாரிசு என்பதற்காக மட்டுமே யாருக்கும் தேர்தலில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

உழைப்பு மற்றும் கட்சி பணியை மனதில் வைத்தே வாய்ப்பு தரப்பட்டுள்ளது” என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.