YouTube video

EPS Opening New Projects : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி K பழனிசாமி அவர்கள் இன்று (5.10.2020) தலைமைச் செயலகத்தில், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் சென்னை மாவட்டம், கீழ்ப்பாக்கம், லுத்ரல் கார்டனில் 13 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 100 காவலர் குடியிருப்புகளை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்கள்.

மேலும், 15 கோடியே 39 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 43 காவலர் குடியிருப்புகள், 4 காவல் நிலையங்கள், 2 காவல்துறை கட்டடங்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினருக்கான 1 குடியிருப்பு,2 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையக் கட்டடங்கள், காவல்துறை தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாநில செயல்பாட்டு மையம் மற்றும் மேம்படுத்தப்பட்ட சமூக ஊடக மையம் ஆகியவற்றை திறந்து வைத்தார்கள்.

மேலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி K பழனிசாமி அவர்கள் இன்று (5.10.2020) தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில் வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக வளாகத்தில் 25 கோடியே 25 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கணினி அறிவியல், இயற்பியல் மற்றும் வணிகவியல் ஆகிய புதிய துறைகளுக்கான முதுகலை மற்றும் ஆராய்ச்சி பட்டப் படிப்புகளுக்கான கட்டடங்கள், மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கான விடுதிக் கட்டடங்கள், துணை வேந்தருக்கான குடியிருப்பு ஆகிய கட்டடங்களுக்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்கள்.

மேலும், கோயம்புத்தூர், சேலம், திருச்சிராப்பள்ளி, நாகப்பட்டினம், திருநெல்வேலி, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகள், பல்கலைக்கழக கல்லூரிகள் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் 58 கோடியே 20 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கான விடுதிக் கட்டடங்களை திறந்து வைத்தார்கள்.

அதுமட்டுமல்லாமல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி K பழனிசாமி அவர்கள் இன்று (5.10.2020) தலைமைச் செயலகத்தில், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் மதுரை மாவட்டம், மதுரை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் 5 கோடியே 60 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இயந்திரங்களுடன் கூடிய சேமிப்புக் கிடங்கினை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்கள்.

மேலும், 47 கோடியே 36 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வேளாண்மைத் துறை கட்டடங்களை திறந்து வைத்து, விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்களை வழங்கிடும் வகையில் வேளாண்மைப் பொறியியல் துறையால் கொள்முதல் செய்யப்பட்ட 23 டிராக்டர்கள் மற்றும் 17 மண் அள்ளும் இயந்திர வாகனங்களையும் வழங்கினார்கள்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.