YouTube video

EPS Condolences to Student Jothi Sri Durga : இந்தியா முழுவதும் மருத்துவ பட்டப்படிப்பை பயில நீட் தேர்வு அவசியம் என மத்திய அரசு அறிவித்து அதனை நடைமுறைப்படுத்தி வருகிறது.

தமிழக அரசும் தமிழக மக்களும் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இந்த கொரானா பேரிடர் நேரத்திலும் நீட் தேர்வு அவசியம் என்று இந்திய மருத்துவ கவுன்சில் நாடு முழுவதும் நாளை நீட் தேர்வை நடத்த உள்ளது.

நீட் தேர்வு விவகாரம்.. மன அழுத்தத்தால் தற்கொலை மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா – தமிழக முதல்வர் இரங்கல்

இப்படியான நிலையில் நீட் தேர்வு காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தால் மதுரையைச் சார்ந்த மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா தற்கொலை செய்து கொண்டார். இவருடைய மறைவு தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மதுரை மாவட்டம், தமிழ்நாடு சிறப்பு காவல்படை வளாகத்திலுள்ள காவல் குடியிருப்பில் ஆறாம் அணியில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் திரு.முருகசுந்தரம் என்பவரது மகள் செல்வி ஜோதிஸ்ரீ துர்கா இன்று தற்கொலை செய்து கொண்டு இறந்தார் எனும் செய்தியை அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

இத்துயர சம்பவத்தில் உயிரிழந்த செல்வி.ஜோதிஸ்ரீ துர்கா அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் மாணவ செல்வங்கள் இது போன்ற விபரீத முடிவுகளை எடுப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. வாழ்வில் வெற்றி பெற எண்ணிலடங்கா வழிகள் இருக்கும் நிலையில், மாணவச் செல்வங்கள் மன உறுதியையும், விடா முயற்சியையும் வளர்த்துக் கொண்டால் வெற்றி பெறுவது நிச்சயம் என தெரிவித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.