Edappadi K. Palaniswami With Baby in Meeting

YouTube video

தமிழக அரசியலில் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா மற்றும் கலைஞர் மு கருணாநிதி அவர்களின் மறைவிற்கு பிறகு மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டு என பலரும் கூறிவந்தனர்.

ஆனால் முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தன்னுடைய திறமையான ஆட்சியால் அந்த பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

EPS With Baby in Meeting

தொலைநோக்கு சிந்தனையுடன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி அனைத்துத் துறைகளிலும் புரட்சியை மேற்கொண்டுள்ளார். ஏழை எளிய மாணவர்களுக்கு மருத்துவ பட்டப்படிப்பு பயில 7.5 சதவீத உள் ஒதுக்கீடு, குடிமராமத்து பணி மூலம் வரலாறு காணாத நெல் உற்பத்தி, முதலீடுகளை ஈர்த்து வேலைவாய்ப்புகள் அதிகப்படுத்துதல் என அவரின் திறமையான திட்டங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஒவ்வொரு மாவட்டமாக சென்று வெற்றி நடை போடும் தமிழகம் என்ற பெயரில் அதிமுக ஆட்சி காலத்தில் சாதனை திட்டங்களை பட்டியலிட்டு வாக்கு சேகரித்து வருகிறார்.

மக்களுடன் மக்களாக கலந்து ஓட்டு சேகரித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நடந்த பிரச்சார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட போது அங்கிருந்த குழந்தை ஒன்று உள்ளது.