Edapadi Palanisamy
 Edapadi Palanisamy

 Edapadi Palanisamy : சென்னை: சேலம் 8வழி சாலை வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவோம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் சேலம் 8 வழி சாலை வழக்கில், பெரும் எதிர்ப்பார்ப்பிற்கு இடையில் தீர்ப்பு வெளியானது. சேலம் 8 வழி சாலைக்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறி உள்ளது.

இந்நிலையில் சேலம் 8 வழி சாலை தீர்ப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது, “நீதிமன்றத் தீர்ப்பை மதிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. 8வழிச் சாலை கட்டமைப்பு, வேலைவாய்ப்பு வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என நம்புகிறோம் என கூறினார்.

மேலும் இதனால் பலர் புதிய வேலைகளை பெறுவார்கள். இது அதிமுகவின் கனவுத்திட்டம்தான்.

ஆனாலும் தீர்ப்பை பின்பற்ற வேண்டியது எங்கள் கடமை. நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவோம்” இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது பேட்டியில் கூறியிருந்தார்.

முன்னதாக அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 8 வழிசாலை குறித்து கருத்து கூறுகையில், “அதிமுக அரசு இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும்” என்று கூறி இருந்தார்.

இந்நிலையில் அதற்கு எதிராக முதல்வர் பழனிச்சாமி கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.,