சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள டாக்டர் திரைப்படம் படத்தின் முழு விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

Doctor Movie Review : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த திரைப்படம் எப்படி இருக்கு கதைக்களம் என்ன என்பது குறித்து அலசலாம்.

படத்தின் கதைக்களம் :

படத்தில் வில்லனாக வரும் வினய் அப்பாவி சிறுமிகளை கடத்தி விற்கும் வேலையை செய்து வருகிறார். மிகப்பெரிய நெட்வொர்க்காக இந்த கும்பல் இயங்கி வருகிறது. ஒரு டாக்டர் களத்தில் இறங்கி இவர்களைக் கண்டு பிடித்தால் எப்படி இருக்கும் என்பதுதான் இந்தப் படத்தின் கதைக்களம்.

துளசி போல வருமா?

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

வருண் டாக்டராக நடித்துள்ள சிவகார்த்திகேயன் தன்னுடைய நடிப்பை சிறப்பாக கொடுத்துள்ளார். படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.

Flop ஆக Chance-ஏ இல்ல.., படம் தாறுமாறா இருக்கு..! | Doctor Public Review | Sivakarthikeyan | TamilHD

வில்லனாக நடிக்கும் வினய் அமைதி வில்லனாக இருந்தாலும் தன்னுடைய நடிப்பை கச்சிதமாக கொடுத்துள்ளார். தீபா, பிரியங்கா, யோகி பாபு உள்ளிட்டோரின் காமெடி வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.

இசை :

அனிருத்தின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். படம் முழுவதும் அவருடைய பின்னணி இசையும் பாடல்களும் ரசிகர்களுக்கு செம ட்ரீட் ஆக உள்ளது.

ஒளிப்பதிவு ‌:

கார்த்திக் கண்ணன் ஒவ்வொரு காட்சியையும் அழகாக படமாக்கி அதற்கு உயிர் கொடுத்துள்ளார்.

இயக்கம் :

நெல்சன் டிலிப்குமர் கோலமாவு கோகிலா படத்தை பிளாக் காமெடி படமாக கொடுத்தார். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. அதே பாணியில் டாக்டர் படத்திலும் வெற்றி பெற்றுள்ளார். சீரியசான இடங்களிலும் காமெடி காட்சிகளால் தியேட்டரை சிரிப்பலையில் மூழ்கடிக்கிறார்.

தம்ப்ஸ் :

  1. அனைவரின் நடிப்பு
  2. இசை
  3. காமெடி
  4. நெல்சன் திலீப் குமாரின் இயக்கம்

தம்ப்ஸ் டவுன் :

  1. லாஜிக்கல் மீறல்கள்
  2. சட்டென முடியும் கிளைமாக்ஸ்
  3. ஆரம்பத்தில் ஸ்லோவான திரைக்கதை.
REVIEW OVERVIEW
டாக்டர் விமர்சனம்
doctor-movie-reviewமொத்தத்தில் டாக்டர் ஆபரேஷனை வெற்றிகரமாக முடித்துள்ளது.