Sivakarthikeyan
ஆக்ஷன் படங்கள் கை கொடுக்காததால் சிவா பழையபடி தன்னுடைய ரூட்டை மாற்றியுள்ளார்.

Doctor, Ayalaan Movie Update : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி சில படங்களில் நடித்து விட்டு பின்னர் ஹீரோவாக அவதாரம் எடுத்தவர் சிவகார்த்திகேயன்.

இவர் தற்போது டாக்டர், அயலான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் காமெடி கலந்த கமெர்சியல் மசாலா திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இறுதியாக சிவா நடித்த ஆக்ஷன் படமான ஹீரோ, காமெடி படம் என கூறி காமெடியே இல்லாமல் வெளியான Mr லோக்கல், சீமராஜா போன்ற திரைப்படங்கள் சொல்லி கொள்ளும் அளவிற்கு வெற்றியை கொடுக்காததால் தன்னுடைய பழைய ரூட்டிருக்கே சென்றுள்ளார்.

அதனால் டாக்டர், அயலான் ஆகிய இரண்டு படங்களிலும் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என கூறப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.