DMDK About Vijayakanth Health Status
DMDK About Vijayakanth Health Status

கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள கேப்டன் விஜயகாந்தின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து தேமுதிக தரப்பில் இருந்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

DMDK About Vijayakanth Health Status : தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும் அரசியல் தளத்தில் முக்கிய அரசியல் தலைவராக வலம் வருபவர் கேப்டன் விஜயகாந்த். தேமுதிக கட்சியின் மூலம் அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

தற்போது கேப்டன் விஜயகாந்த் உடல்நலக் குறைபாடு காரணமாக வீட்டில் ஓய்வெடுக்க அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் கட்சியை வழிநடத்தி வருகிறார்.

இந்த நிலையில் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த நேரத்தில் இவர் நேற்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது.

கேப்டன் விஜயகாந்துக்கு கொரானா தொற்று.. உச்சகட்ட அதிர்ச்சியில் தொண்டர்கள்

தற்போதைய தேமுதிக தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மியாட் மருத்துவமனைக்கு செல்வது வழக்கமான ஒன்று.

அப்படி மருத்துவமனையில் உடல் பரிசோதனைக்காக சென்ற போது அவருக்கு லேசான கொரானா வைரஸ் அறிகுறி இருப்பது தெரிய வந்தது. ஆனால் உடனடியாக அவர் கழிக்கப்பட்ட சிகிச்சை காரணமாக தற்போது பூரண நலமுடன் இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இதனால் தேமுதிக தொண்டர்கள், ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் நிம்மதி அடைந்துள்ளனர்.