முதல் முறையாக மகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் செவ்வந்தி சீரியல் திவ்யா ஸ்ரீதர்.

கன்னட சீரியலில் நடித்து பிரபலமானவர் திவ்யா ஸ்ரீதர். இதனை தொடர்ந்து இவர் தற்போது தமிழில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. அதன் பிறகு விஜய் டிவி செல்லம்மா சீரியல் புகழ் அர்ணவ்வை காதலித்து திருமணம் செய்து கொண்டு கர்ப்பமானார்.

தங்களது திருமணம் மற்றும் கர்ப்பம் பற்றிய அறிவிப்பை வெளியிட்ட கொஞ்ச நாட்களிலேயே அர்ணவ் செல்லம்மா சீரியல் அன்ஷிதாவுடன் நெருங்கி பழகி வருவதாக திவ்யா ஸ்ரீதர் குற்றம் சாட்டினார்.

இவர்களுக்கு இடையேயான பிரச்சனை பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் திவ்யா அழகிய மகளை பெற்றெடுத்தார். இதுவரை அர்ணவ் தன்னுடைய குழந்தையை கூட பார்க்கச் செல்லாத நிலையில் திவ்யா ஸ்ரீதர் கையில் குழந்தையை வைத்திருக்கும் புகைப்படத்தை உருக்கமாக பதிவு செய்துள்ளார்.