டிஸ்கவரி சேனல் ரஜினியின் ஸ்பெஷல் வீடியோவை உலக சிரிப்பு தினமான இன்று வெளியிட்டுள்ளது.

இந்திய திரை உலகில் ரசிகர்களின் மத்தியில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் ரஜினிகாந்த். அவர் தற்பொழுது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க பல முன்னணி பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

Smile dayக்கு உதாரணம் ரஜினி…!! டிஸ்கவரி சேனல் வெளியிட்டுள்ள வீடியோ.

இப்படத்திற்காக படப்பிடிப்பு பணிகள் சென்னையில் உள்ள பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று உலக சிரிப்பு தினம் என்பதால் டிஸ்கவரி சேனல் நடிகர் ரஜினிகாந்தின் ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

Smile dayக்கு உதாரணம் ரஜினி…!! டிஸ்கவரி சேனல் வெளியிட்டுள்ள வீடியோ.

அந்த வீடியோவில், நடிகர் ரஜினிகாந்தை போல ஸ்டைலாக கண்ணாடியை மாட்ட பலரும் முயற்சி செய்து வருகிறார்கள், ஆனால் எல்லாருமே சூப்பர் ஸ்டார் ஆக முடியாது எனக் கூறி இறுதியில் கருப்பு உடையில் ஸ்டைலாக ரஜினி கண்ணாடியை மாட்டுவது போல் அந்த வீடியோ முடிவடைகிறது. இன்று உலக சிரிப்பு தினம் என்பதால் ரஜினியின் சிரிப்பை உதாரணமாக காட்டி அந்த ஸ்பெஷல் வீடியோவை டிஸ்கவரி சேனல் வெளியிட்டுள்ளது.