நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படத்தின் இரண்டு போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்த நிலையில் மூன்றாவது போஸ்டருக்கு எதிர்பார்த்து இருந்த ரசிகர்களை படக்குழுவினர் ஏமாற்றியுள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து இவரது நடிப்பில் தற்போது “துணிவு” என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. அஜித் குமாரின் 61வது திரைப்படமாக உருவாக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க போனி கபூர் தயாரித்து வருகிறார்.

ஏமாற்றமடைந்த அஜித் ரசிகர்கள்!!… படக்குழுவின் தகவலால் அதிர்ச்சி!.

எச் வினோத் மூன்றாவது முறையாக அஜித்துடன் கூட்டணி சேர்ந்து இந்த படத்தை இயக்குகிறார். படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று முன்தினம் வெளியானது. இதுவரை ‘வி’ என்ற எழுத்தில் படத்தின் தலைப்புகளை வைத்து வந்த அஜித் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அந்த பாணியை மாற்றி உள்ளார்.

ஏமாற்றமடைந்த அஜித் ரசிகர்கள்!!… படக்குழுவின் தகவலால் அதிர்ச்சி!.

இந்நிலையில் துணிவு திரைப்படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியானதை தொடர்ந்து மூன்றாவது போஸ்டர் இன்று வெளியாகும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இப்படத்தின் மூன்றாவது போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடும் தேதியை படக்குழு அக்டோபர் மாதத்திற்கு மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மூன்றாவது போஸ்டர்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்த அஜித் ரசிகர்களுக்கு இந்த தகவல் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் இருக்கின்றனர்.