YouTube video

Director Venkat Prabhu About STR‘s Maanaadu First Single

Malavika Mohanan Character Details in Master : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படம் உருவாகி உள்ளது.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். விஜய் சேதுபதி மற்றும் அர்ஜுன் தாஸ் ஆகியோர் வில்லன்களாக நடித்துள்ளனர். சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், மகேந்திரன், தீனா, ஆண்ட்ரியா, வர்ஷா பொல்லம்மா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இன்றைய மாளவிகா மோகன் இனிய பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் மாஸ்டர் படத்தில் திரைக்கதை அமைக்கும் பணியில் இவர்களுடன் இணைந்து பணியாற்றிய இயக்குனர் ரத்னகுமார் மாளவிகா மோகனன் கதாபாத்திரம் குறித்த ரகசியத்தை உடைத்துள்ளார்.

அவருடைய பிறந்தநாள் வாழ்த்து பதிவில் மாளவிகா மோகனன் இப்படத்தில் பேராசிரியராக நடித்து இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.