அரண்மனை-5 போஸ்டர்கள், டிசைன்கள் எல்லாம் போலியானது: குஷ்புவின் ஆவேச பதிவு..

Web Ads

பொழுதுபோகவில்லை என்றால், சிலருக்கு வதந்தியை பற்ற வைத்து விஷமம் செய்வது வாடிக்கையாகி விட்டது. இதனால் ஆவேசப்பட்டிருக்கிறார் குஷ்பு சுந்தர். விஷயம் என்னன்னா..

சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 4 படம் கடந்த மே மாதம் திரையரங்குகளில் வெளியாகி 100-கோடிக்கு மேல் வசூலை அள்ளியது தெரிந்ததே.

இப்படத்தில் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா ஆகியோர் முக்கியமான ரோலில் நடித்திருந்தனர் நகைச்சுவை, திரில்லர் பாணியில் உருவான அரண்மனை 4 படம் முதல் நாட்களில் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

தற்கொலை செய்து கொண்டு இறந்து போனதாக சொல்லப்படும் தமன்னா, தனது இரண்டு குழந்தைகளை பாதுகாக்க, ஆவியாக அந்த வீட்டில் இருப்பது, அவர்களுடன் விளையாடுவது போன்ற காட்சிகள் ரசிக்கும்படி இருந்தது.

தமன்னாவின் அண்ணனாக வரும் சுந்தர்.சி, தங்கையும் கணவரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை. இவர்களின் மரணத்தில் மர்மம் இருப்பதை கண்டுபிடித்து, ஒரு தீய சக்தி தங்கையின் மகளை பழி கொடுக்க இருப்பதை தெரிந்து கொண்டு, அந்த தீய சக்தியிடம் இருந்து தங்கையின் மகளை காப்பாற்றுகிறார். படத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் தியேட்டரில் ரசித்துப் பார்த்தார்கள்.

Web Ad 2

இதையடுத்து, அரண்மனை ஐந்தாம் படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்டதாக நேற்று ஒரு தகவல் வெளியானது. ‘சுந்தர்.சி இயக்கும் இந்த படத்துக்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைக்க இருப்பதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் கடைசியில் அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்க இருப்பதாக, பர்ஸ்ட்லுக் போஸ்டருடன்’ ஒரு தகவல் நேற்று பரவியது.

இந்நிலையில், நடிகை குஷ்பு சுந்தர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்த செய்தியை திட்டவட்டமாக மறுத்து பதிவு ஒன்றை ஷேர் செய்துள்ளார்.

அதில், தமிழ் சினிமாவின் வெற்றி பெற்ற மற்றும் பொழுதுபோக்கு படமான அரண்மனை ஐந்தாம் பாகம் உருவாக இருப்பதாக நேற்று முதல் ஒரு செய்தி இணையத்தில் பரவி வருகிறது. அரண்மனை படம் குறித்த வெளியான ஃபர்ஸ்ட்லுக் மற்றும் போஸ்டர் டிசைன்கள் அனைத்தும். போலியானது.

இது யாரோ சில விஷமிகள் செய்த வேலை, அரண்மனை ஐந்தாம் பாகத்தை எடுக்க முடிவு செய்யும் போது நிச்சயம் உங்களிடம் நேரடியாகத் தெரிவிப்போம்’ என குறிப்பிட்டுள்ளார். எரிச்சல் வருவது நியாயம் தானே.!

அப்ப, இந்த செய்தியை பரவ விட்டதன் மூலகர்த்தா யாரோ.?

director sundar.c in aranmanai-5 movie start?: this is fake news-kushboo explain..
director sundar.c in aranmanai-5 movie start?: this is fake news-kushboo explain..