ராம்சரண் நடித்த ‘கேம் சேஞ்சர்’ படத்தின் கதை எப்படி உருவானது?: ஷங்கர் ‘வாட்சப்’ தகவல்..
ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் கதை எப்படி கிடைத்தது என்ற சுவாரஸ்ய தகவல் பார்ப்போம், வாங்க..
ஷங்கர் இயக்க, ராம் சரண் நடிப்பில் உருவான ‘கேம் சேஞ்சர்’ படத்தை, தில் ராஜு தயாரித்துள்ளார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையில் வெளியாகவுள்ளது.
முன்னதாக, கமல் நடிப்பில், ஷங்கரின் இயக்கி, பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான ‘இந்தியன் 2’ படத்தின் முதல் தோல்வியால் ஷங்கர் விமர்சிக்கப்பட்டார். அந்த விமர்சனங்களுக்கு பதிலடி தரும் முனைப்பில் ‘கேம் சேஞ்சர்’ படத்தை உருவாக்கியுள்ளார் ஷங்கர்.
வக்கம்போல, மிகப்பெரிய பொருட்செலவில் உருவான இப்படத்தின் கதையை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார். குறிப்பாக, ஷங்கர் மற்ற இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல் முறையாகும்.
இந்நிலையில் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் கதை உருவானது எப்படி? அதாவது, கொரோனா ஊரடங்கு காலத்தில் அனைத்து இயக்குனர்களும் கலைஞர்களும் வீட்டிலேயே இருக்கும் நிலை.
அப்போது, கதைகளை பற்றிப் பேசிக்கொள்ள இயக்குனர்களுக்கான ‘வாட்சப் குரூப்’ ஒன்றை லிங்குசாமி உருவாக்கியிருந்தார். இதில், மணிரத்னம் முதல் லோகேஷ் கனகராஜ் வரை பல இயக்குனர்கள் குரூப்பில் இருந்துள்ளனர். கதைகளை பற்றியும் சினிமா பற்றியும் இவர்கள் பேசிக்கொள்வார்கள்.
அப்போது தான் கார்த்திக் சுப்புராஜ் ஒரு ஒன் லைன் ஸ்டோரியை ஷங்கரிடம் கூறியுள்ளார். “இதை நீங்கள் பண்ணால் தான் சரியாக இருக்கும்” என கார்த்திக் சுப்புராஜ் கூறியிருக்கிறார். ஷங்கருக்கும் அந்த ஒன் லைன் ஸ்டோரி பிடித்துப்போகவே, அந்த கதையை படமாக இயக்க ஒப்புக்கொண்டுள்ளார். அப்படித்தான் ‘கேம் சேஞ்சர்’ கதை உருவானது.
இந்த சுவாரஸ்ய தகவலை ஷங்கர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்டின்னா, படத்துல நன்றி கார்டு போடும்போது ‘லிங்குசாமி’ பேர் வருமா ஷங்கர் சார்?