விஜய் நடிக்கும் கடைசிப்படம், தெலுங்கு ரீமேக் படமா? முழுக்க முழுக்க அரசியல் படமா? விவரம்..
தளபதி விஜய் நடிக்கும் ‘தளபதி-69’ படம் குறித்த அப்டேட்ஸ் பார்ப்போம்..
தெலுங்கு சினிமாவில், பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘பகவத் கேசரி’ என்ற படத்தின் ரீமேக் தான் ஹெச்.வினோத் இயக்கும் ‘தளபதி 69’ என சிலர் கூறி வருகின்றனர். ஆனால், இதெல்லாம் வெறும் வதந்தி என்றும், ரீமேக் படம் இல்லை என்றும் தகவல்கள் வருகின்றன.
இந்நிலையில், ‘விஜய் இப்படத்துடன் சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியலில் களமிறங்க இருப்பதால், கண்டிப்பாக ‘தளபதி 69′ திரைப்படம், ஒரு அரசியல் படமாகத்தான் இருக்கும்’ என சொல்லப்பட்டது.
மேலும், இப்படத்தின் போஸ்ட்டரை பார்க்கும்போதும், இப்படம் அரசியல் பேசும் படமாகவே தெறிக்கும் எனவும் கணிக்கப்பட்டது. ஆனால், தளபதி 69 திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு கமர்ஷியல் படமாகவே உருவாகி வருகின்றது.
இப்படத்தில் சில அரசியல் சார்ந்த விஷயங்கள் இருந்தாலும், முழுக்க முழுக்க ஒரு மாஸான வியாபார நோக்கம் கொண்ட படமாகவே தயாராகி வருகிறது.
சாட்டையடி வசனங்களாய், அனல் பறக்கும் கேள்விகளாய் எடுக்கப்படும் அரசியல் படம் என்றால், விளம்பரத்திற்காகவும் நிச்சயம் சில எதிர்ப்புகள் வரும். அது தயாரிப்பு நிர்வாகத்துக்கும், படத்திற்கும் பிரச்சினையாக அமையும்.
எனவே, கமர்ஷியல் படமெடுத்தால் எந்த பிரச்சினையும் இருக்காது, கடைசிப் படமாகவும் அமைவதால் வசூலிலும் பெரிய சாதனையை படைக்கலாம். எனவே, விஜய் கமர்ஷியல் பாதையை தேர்ந்தெடுத்து இருக்கிறார்.
இதுவரை தமிழ் சினிமாவில் எந்த ஒரு படமும் ரூபாய் 1000 கோடி வசூல் சாதனையை செய்யவில்லை. பார்க்கலாம், சூப்பர் ஸ்டாரின் கூலியா? ‘தளபதி 69’ படமா? முந்துவது எதுவென.!