Web Ads

‘ஏகே-64’ திரைப்படம் ‘அட்டகாசம்’ படத்தின் தொடர்ச்சியா?: இயக்குநர் சரண் விளக்கம்..

அஜித் நடிப்பில் உருவான ‘குட் பேட் அக்லி’ படம் வெளியாகி 6 மாதங்கள் ஆகியும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு துவங்கவில்லை. அஜித் தற்போது கார் பந்தயங்களில் பிஸி. ஆதலால், அடுத்த மாதத்தில் இருந்து ஏகே64 திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என கூறப்படுகின்றது.

இந்நிலையில், அஜித்தின் ஆஸ்தான இயக்குநர்களில் ஒருவரான சரண், அவரை வைத்து பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம் என மூன்று வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் சரண். அவ்வகையில் ஏகே64 திரைப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையில் இயக்குநர் சரணின் பங்கும் இருப்பதாக ஒரு தகவல் பரவியது.

ஏகே64 திரைப்படத்தின் கதை ஹார்பர் சம்பந்தப்பட்ட கதை என்றும், அட்டகாசம் படத்தில் அஜித் ‘குரு’ என்ற ரோலில் நடித்திருப்பார். அந்த கதாபாத்திரத்தின் தொடர்ச்சியே ஏகே64 திரைப்படம் எனவும் ஒரு வதந்தி பரவி வந்தது. அதன் காரணமாக ஆதிக் இப்படத்திற்காக சரணை அழைத்திருக்கிறார். இருவரும் இணைந்து தான் ஏகே64 திரைப்படத்தின் கதையை தயார் செய்து வருகின்றனர் என்றெல்லாம் சொல்லப்பட்டது.

இது குறித்து சரண் தெரிவிக்கையில் ‘ இதெல்லாம் வதந்தி. இதில், எந்த உண்மையும் இல்லை. ஏகே64 திரைப்படம் அட்டகாசம் குருவின் தொடர்ச்சி என்பது உண்மையில்லை. அஜித் ரசிகர்களை எப்படி திருப்தி செய்யவேண்டும் என்பதில் ஆதிக் ரவிச்சந்திரன் பிஹெச் முடித்திருக்கிறார். அவர், கண்டிப்பாக ஏகே64 திரைப்படத்தையும் சிறப்பான முறையில் கொடுப்பார் என்றார் சரண். ஏகே64 திரைப்படத்தை அடுத்தாண்டு கோடை விடுமுறையில் வெளியிட அஜித் முடிவெடுத்திருப்பதாக தெரிகின்றது. பொறுத்திருந்து பார்ப்போம்.

director saran about ak64 movie update
director saran about ak64 movie update