காமெடிப் படங்கள் ஏன் இயக்குவதில்லை?: மணிரத்னம் விளக்கம்

நகைச்சுவைப் படங்களை இயக்குவது தொடர்பாக, மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ள தகவல்கள் காண்போம்..

‘நாயகன்’ ரிலீஸாகி 37 ஆண்டுகளுக்கு பிறகு மணிரத்னம்-கமல்ஹாசன் இணைந்துள்ள ‘தக் லைஃப்’ படம் வருகிற ஜூன் 5-ந்தேதி ரிலீஸாகிறது. படத்தில் திரிஷா சன்யா மல்ஹோத்ரா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜு ஜார்ஜ், நாசர் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் ‘தக் லைஃப்” பட புரமோஷன் நிகழ்வில் மணிரத்னம், தனக்குப் பிடித்த ஜானர் படங்களைப் பற்றி பேசியதாவது:

‘எனக்கு மிகவும் பிடித்தது நகைச்சுவை படங்கள். ஆனால், நான் அவற்றில் சிறந்தவன் அல்ல. அதனால், நான் அவற்றை உருவாக்குவதில்லை. நான் அதைப் பார்க்கிறேன். கமல்ஹாசன் நகைச்சுவை செய்கிறார், அவர் செய்யும் நகைச்சுவைப் படங்கள் நம்பமுடியாதவை. நான் அவற்றை ஒருபோதும் உருவாக்க முடியாது. அதனால், நான் அதை பார்ப்பதோடு நிறுத்திக் கொள்கிறேன். என கூறினார்.

இதற்கு பதிலளித்த கமல்ஹாசன், ‘மணிரத்னத்தால் நகைச்சுவைப் படங்களை இயக்க முடியாது என்பது அல்ல. ஆனால், அவர் அதைத் தேர்வு செய்யவில்லை என்று கூறினார். இயக்குனர் மணிரத்னம் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக, பல்வேறு மாஸ்டர் பீஸ் படங்களைக் கொடுத்திருக்கிறார்.

அவர், ரொமான்ஸ் படங்களைக் கூட அதிகளவில் இயக்கி இருக்கிறார். ஆனால், காமெடி படங்கள் பக்கம் தலைகாட்டியதே இல்லை. அவர் படங்களிலும் பெரியளவில் காமெடி காட்சிகள் இருக்காது’ என்றார் கமல்ஹாசன்.

director maniratnam says he never direct comedy film