அட்லி இயக்கும் அடுத்த படத்தில் ரஜினியா, கமலா?: பேச்சு வார்த்தை..

ஜவான் பட வெற்றியை தொடர்ந்து, அட்லியின் அடுத்த பட தகவல்கள் குறித்து பார்ப்போம்..
தெறி, மெர்சல், பிகில் என விஜய்யின் மார்க்கெட் அடுத்த கட்டத்திற்கு செல்ல அட்லி இயக்கிய படங்களும் முக்கிய காரணமாக அமைந்தது. அதனால், பாலிவுட் வரவேற்றது.
அங்கு, ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ எடுத்தார். ஆயிரம் கோடிக்கு மேல் ஜவான் திரைப்படம் வசூலித்து சாதனை படைத்தது.
இந்நிலையில், அடுத்ததாக சல்மான் கானை இயக்கப் போவதாக தகவல்கள் வருகின்றன. ஆனால், இப்படத்தில் சல்மான் கானுக்கு இணையான ஒரு ரோலில் மேலும் ஒரு ஹீரோ நடிப்பதாகவும், அந்த ஹீரோ யார் என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகின்றது.
அந்த வகையில், தற்போது ரஜினி மற்றும் கமலிடம் அட்லி பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தெரிகின்றது. இதில், ஒருவர் தான் அட்லியின் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. அது கமலாக இருக்க கூடும் என்றும் தகவல்கள் வருகின்றன.
ஏற்கனவே, கடந்த சில மாதங்களாக அட்லியின் அடுத்த படத்தில் கமல் நடிப்பார் என சொல்லப்பட்டு வந்தது.
இந்நிலையில், தற்போது ரஜினியுடனும் அட்லி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வருகின்றன. எனவே, அட்லியின் அடுத்த படத்தில் நடிக்கப்போவது யார் ? ரஜினியா ? கமலா ? என்ற தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
