பார்வதியிடம் பணத்தை கொடுத்த ரோகினி, அண்ணாமலை சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
பார்வதியிடம் பணத்தை கொடுத்துள்ளார் ரோகினி.
தமிழ் சின்ன துறையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ரோகிணி பார்வதியை சந்தித்து இந்தப் பணம் காணாமல் போனதால் வீட்ல ஒரே பிரச்சனையா இருக்கு ஆன்ட்டி தேவையில்லாமல் மீனா மேல பழிய ஆயிடுச்சு அதனால நான் என்னோட தாலிய வித்துட்டு இரண்டு லட்ச ரூபா பணம் எடுத்துட்டு வந்திருக்கேன் நீங்க ஆண்டிகிட்ட துணியில மறைந்து இருந்தது நான் பார்க்கவில்லை என்று சொல்லி அந்த பணத்தை கொடுத்துடுங்க என்று ரோகினி சொல்ல உன்ன மாதிரி மருமகள் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்மா என்று சொல்லி பணத்தை வாங்கி கொள்கிறார். மறுபக்கம் அண்ணாமலை வேலைக்கு போக வேண்டும் என்று முத்துவிடம் சொன்ன அதெல்லாம் வேண்டாம் இந்த வயசுல நீ ரெஸ்ட் தான் எடுக்கணும் என்று சொல்லுகிறார். ரெஸ்ட் எடுத்து போர் அடிக்குது என்று சொல்ல அப்போ உன் பிரண்டு போய் பாருப்பா. நீ வேலைக்கு எல்லாம் போக வேண்டாம் என்று முத்து மீனா சொல்கின்றனர். ஆனால் விஜயா வேலைக்கு தானே போகட்டும் விடுங்க என்று சொல்லுகிறார். அவர்தான் போரடிக்குதுன்னு சொல்றது இல்ல போகட்டும் என்று சொல்கிறார்.
ரோகினி வீட்டுக்குள் வந்து மனோஜிடம் பணத்தை கொடுத்து இதில் மூன்று லட்சம் பணம் இருக்கு ஆண்டி கிட்ட கொடு என்று சொல்ல, உனக்கு பணம் ஏது என்று கேட்கிறார் தாலி செயினை வித்துட்டேன் என்று பணத்தை கொடுக்க அவரும் வந்து விஜயாவிடம் கொடுக்கிறார். அதை முத்துவிடம் விஜயா கொடுக்க சொல்லுகிறார். அந்த நேரம் பார்த்து பார்வதி போன் போட்டு பணம் தொலையல இங்கதான் இருக்கு என்று சொல்ல விஜயா வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லுகிறார்.உடனே முத்து அப்போ மீனாவ பார்த்து திருடி சொல்லி அவளை அசிங்கப்படுத்தினதுக்கு என்ன பண்றது என்று கேட்கின்றனர். நான் என்ன கொலையா பண்ணிட்டேன் என்று விஜயா கேட்க மத்தவங்க மனச கஷ்டப்படுத்துறதும் கொலைக்கு சமம் என்று சொல்லுகிறார். அண்ணாமலை மீனா ஏழை வீட்டு மருமகன்றதனால தான் அவ மேல உன்னால பழி போட முடிஞ்சது நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காத அன்னைக்கு பணம் இருந்தப்போ ரோகினி l ஏதோ சாப்பிடுவதற்கு வாங்கிட்டு வந்தாங்கன்னு சொன்னேன் அப்போ உனக்கு ஏன் ரோகினி மேல சந்தேகம் வரல என்று கேட்க, விஜயா எதுவும் பேசாமல் இருக்கிறார். இதுவரைக்கும் மீனா ஏன் அத்தை என்ன அப்படி கேட்டீங்கன்னு கேட்டு இருப்பாளா கேட்டிருக்க மாட்டா ஆனா ரோகினியோ சுருதியோ அப்படி இருக்க மாட்டாங்க என் மேல என் பழி போட்டீங்கன்னு சொல்லி சண்டை போட்டு இருப்பாங்க என்று சொல்லி சுருதி என்ன பண்ணி இருப்பமா என்று கேட்கிறார் என்ன செய்யாத தப்புக்கு யாராவது என் மேல பழைய போட்ட நான் சும்மா இருக்க மாட்டேன் என்று சொல்லுகிறார்.
அண்ணாமலை கேட்டியா ஆனா இப்ப கூட உனக்கு மீனா கிட்ட நான் பேசினது தப்பான வார்த்தைகள் தான் என்று சொல்றியா பாரு என்று சொல்ல விஜயா எதுவும் பேசாமல் அமைதியாக நிற்கிறார் உடனே முத்து விடுப்பா நாங்க இதெல்லாம் எதிர்பார்க்கல என்று சொல்லிவிட உடனே அண்ணாமலை மீனா அப்பாவெல்லாம் இல்லாம இருக்கலாம் ஆனால் அந்த இடத்தில் தான் நான் இருக்கேன் என்று சொல்ல மீனா அழுது கொண்டே அண்ணாமலை காலில் விழுந்து ரொம்ப நன்றி மாமா என்று சொல்லுகிறார். அழாதமா என்று அண்ணாமலை சொல்ல அவ மனசுல இருக்கிற வலி பா விடு என்று முத்து சொல்லுகிறார். பிறகு பணத்தில் அத்தை கிட்ட போய் குடு நகை திருப்பிடட்டும் என்று சொல்ல வேணா நீங்க டீவ் கட்டிக்கோங்க அவங்க பொறுமையா பாத்துக்கலாம் என்று சொல்ல அதெல்லாம் வேணாம் எடுத்துக்கொண்டு போய் குடு என்று சொல்லுகிறார் முத்து.
பிறகு முத்துவும் மீனாவும் என்ன பேசிக் கொள்கின்றனர்? அதற்கு மீனாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.