தனுஷ்-சிம்பு பேசியது பற்றி, திரிஷா போட்ட இன்ஸ்டா பதிவு வைரலாகிறது..
தனுஷும் சிம்புவும் சிரித்துப் பேசி மகிழ்ந்ததை பார்த்த திரிஷா, அப்டேட்டாக ஒரு பதிவை தட்டியுள்ளார். இது குறித்து பார்ப்போம்..
தனுஷின் இட்லி கடை படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் திருமணம் சென்னையில் நடந்தது தெரிந்ததே. நிகழ்ச்சியில் தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், நயன்தாரா என பலர் கலந்து கொண்டனர்.
தனுஷும், நயன்தாராவும் ஆளுக்கொரு பக்கம் முகத்தை திருப்பிக் கொண்ட புகைப்படம் எக்ஸ் தளத்தில் வெளியாகி வைரலானது. மேலும், ஒரே வரிசையில் அமர்ந்திருந்த நிலையில் நயன்தாரா, படையப்பா படத்தில் வரும் நீலாம்பரி போல கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார். தனுஷ், வேஷ்டி சட்டையுடன் அமைதியாய் காட்சியளித்தார்.
இந்நிலையில் சிம்புவும், தனுஷும் சந்தித்துக் கொண்டனர். அப்படியே இருவரும் கட்டிப்பிடித்துக் கொண்டதுடன், பயங்கரமாக சிரித்தும் பேசியிருக்கிறார்கள்.
அவர்கள் இருவரும் அப்படி சிரிக்கும் அளவுக்கு என்ன பேசியிருப்பார்கள் என வலைதளங்களில் பலரும் கணித்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு வரை.!
மேலும், இட்லி கடையை பற்றி பேசியிருப்பார்கள். ரூ.10 கோடி வக்கீல் நோட்டீஸ் பற்றி பேசியிருப்பார்கள். ‘கல்யாணமே பண்ணாதடானு’ பேசியிருப்பார்கள் என ரசிகர்களாக பல விஷயங்களை யூகித்து, அள்ளி விடுகிறார்கள்.
யப்பா.. நாங்கள் பேசி சிரித்ததற்கு இத்தனை அர்த்தம் கண்டுபிடிக்கிறீர்களா? என தனுஷும், சிம்புவும் ஆச்சரியப்பட்டாலும் படலாம். இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் ஒரு ஸ்டோரி போட்டிருக்கிறார் திரிஷா. அந்த ஸ்டோரியில் கூறியிருப்பதாவது:
‘ஒரு புத்திசாலி ஒருமுறை என்னிடம் கூறினார்; ‘உன்னை மனமுடைய செய்தவர் அவர்தான் என தெரிந்தும்.. அவருடன் நெருக்கமாக இருக்கும், நட்பாக பழகும் நபருடன் நெருக்கமாக இருக்கக் கூடாது’ என்றார்.
‘திரிஷா இப்படி தாக்கியிருப்பது சிம்புவை தான்’ என ரசிகர்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள். காரணம் இல்லாமல் இன்ஸ்டாவில் ஸ்டோரி போட மாட்டார் திரிஷா. அதுவும் சிம்பு, தனுஷ் சந்திப்பு புகைப்படம் வைரலாகியிருக்கும் நேரத்தில், இப்படியொரு ஸ்டோரி போட்டிருக்கிறார் என்றால் அதில் அர்த்தம் இருக்கிறது.
இந்த ஸ்டோரிக்கும் சிம்பு மற்றும் தனுஷுக்கும் தொடர்பு இருக்கிறது. தனுஷின் நல்ல தோழி த்ரிஷா என ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.
முன்னதாக, வக்கீல் நோட்டீஸ் அனுப்பி வைத்த தனுஷுக்கு புதிதாக ஒரு ஜெர்மன் வார்த்தையை கற்றுக் கொடுத்தார் நயன்தாரா. இதையடுத்து, ஜப்பான் சென்ற திரிஷாவோ ஜப்பானிய வார்த்தை ஒன்றை அனைவருக்கும் கற்றுக் கொடுத்தார்.
அதை பார்த்தவர்களோ, தனுஷ்க்கு ஆதரவாக தான் ஜப்பானிய வார்த்தையை கற்றுக் கொடுத்திருக்கிறார் ‘தென்னிந்திய தேவதை’ திரிஷா என்கிறார்கள்.
ஆக, ஒரு இன்ஸ்டா ஸ்டோரிக்குள்ள எத்தனை கதை தான்.!