சிம்பு நடிக்கவிருக்கும் படக்கதை என்ன?: இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து அப்டேட்

‘டிராகன்’ பட இயக்குனர் அஷ்வத்தின்அடுத்த பட அப்டேட் பார்ப்போம்..
சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு ‘STR- 51’ பட போஸ்டரில் சிம்பு ‘god of love’ என்ற ரோலில் நடிப்பதாக குறிப்பிடப்பட்டது. இதை வைத்து, இப்படம் ஃபாண்டஸி படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
இதைத்தொடர்ந்து இன்னும் ஓரிரு மாதத்திற்குள் படப்பிடிப்பு துவங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இப்படத்தை இயக்கவிருக்கும் அஸ்வத் மாரிமுத்து,
பேசிய தகவல் வைரலாகி வருகின்றது.
தற்போது அவரது இயக்கத்தில் உருவான ‘டிராகன்’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இச்சூழலில் அடுத்த படமான ‘STR 5’ பற்றி கேட்கப்பட்டது. சிம்பு நடிப்பில் 2007-ம் ஆண்டு உருவாகவிருப்பதாக அறிவிக்கப்பட்ட ‘கெட்டவன்’ படமா இந்த ‘STR-51’ என அவரிடம் கேட்கப்பட்டது. இந்த செய்தியை அஸ்வத் முற்றிலும் மறுத்துள்ளார்.
‘கண்டிப்பாக அந்த படம் இது கிடையாது. ‘கட்டம் கட்டிக் கலக்குறோம்’ என போஸ்டர் வெளியிட்டபோது அதனை ஒரு சிலர் விமர்சித்தார்கள். அதைத்தொடர்ந்து ‘இது ஒரு ஃபாண்டஸி படமாக இருக்கும்’ என இப்படத்திலிருந்து வெளியான இரண்டாவது போஸ்டரில் இருந்து தெரிய வந்துள்ளது.
அதைத்தொடர்ந்து இது அந்த படமாக இருக்குமோ? இந்த படமாக இருக்குமோ?என்றெல்லாம் கூறி வருகின்றனர் என்றார் அஸ்வத் மாரிமுத்து. இதையடுத்து ‘STR 51’ கெட்டவன் திரைப்படமோ அல்லது மன்மதன்-2 படமோ கிடையாது என உறுதியாகியுள்ளது.
முன்னதாக, இப்படம் குறித்து தெரிவிக்கையில், ‘காதல் இருக்கும் பயத்தினில் தான், கடவுள் பூமிக்கு வருவதில்லை’ என பதிவிட்டது குறிப்பிடத்தக்கது. அப்டின்னா, அஜித் நடிச்ச ‘தீனா’ பட பாட்டு வரிதான் கதைக்கருவா?
